செய்திகள்

“ஆசிரிய உதவியாளர்கள் 149 பேருடைய நியமனங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விஸ்வநாதன் புஸ்பானந்தன் நடவடிக்கை ..”

மத்திய மாகாணத்தில் ஏனைய மாகாணங்களை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை மேலதிகமாக
இருந்ததால் ஆசிரிய உதவியாளர்கள் 149 பேருடைய நியமனங்கள் தற்காலிகமாக
இடைநிறுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண கல்வி அமைச்சின்
உதவிப் பணிப்பாளரிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோட்ட தொழிலாளர் சங்கத்தின்
நுவரெலிய மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் புஸ்பானந்தன் தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டு வினவியபோது ,

குறித்த நியமனங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது, அதற்கு பிரதான
காரணமாக கோரோணா தொற்று நோய் பரவல் ஆகும் இதற்கிடையில் கல்வி அமைச்சின் புதிய
சுற்றுநிருபம் ஒன்றும் வெளிவந்துள்ளது தாகவும் ,அதில் புதிய நியமனங்கள் வழங்க
வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் புஸ்பானந்தன் கூறுகையில் இந்த விடயத்தில் மேலும்
காலதாமதமானால்
ஜனாதிபதி பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சொல் தீர்மானித்துள்ளதாக
கூறியுள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen