சமூகம்செய்திகள்மலையகம்

ஆசிரிய பயிற்றுவிப்பாளர்கள் சமூகவலைத்தளத்தில் போராட்டம்

இரண்டாம் மொழி ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களின் நியமனம் கோரி இன்று காலை முகநூலின் ஊடக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதுவரை நியமனம் வழங்கப்படாது, பாதிக்கப்பட்ட 1,300 ஆசிரியர்களால் குறித்த விழிப்புணர்வு போராட்டம் சமூகவளைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டது. தமக்கான ஆசிரிய நியமனம் குறித்து இதற்கு முன்பும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது தொடர்பில் எவ்வித பலனும் கிடைக்கப்பெறாத நிலையில், இவ்வாறு ஆசிரிய பயிற்றுவிப்பாளர்கள் ஒன்றிணைந்து இன்று சமூக வலைத்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இப் போராட்டம் குறித்து பல தரப்புகளிலும் சிறந்த வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இந்த நியமனம் தொடர்பாக குறிப்பிட்ட அதிகாரிகள் தமக்கான நியமனங்களை வழங்குவார்கள் என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Articles

Back to top button