செய்திகள்

ஆடைத் தொழிற்சாலையின் அலட்சியம் : 71 தொற்றாளர்கள் அடையாளம்

இரத்தினபுரி – கொடக்கவெல பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 30 பேருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 26 பேர் தொற்றுக்குள்ளானமை உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த ஆடைத் தொழிற்சாலை கடந்த 26ஆம் திகதி மூடப்பட்டது.

அத்துடன், தொற்றாளர்களுடன் தொடர்புடைய 150 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தொழிற்சாலை நிர்வாகம் சுகாதார வழிகாட்டல்களைப் புறக்கணித்ததால் இந்நிலைமை ஏற்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 45 தொற்றாளர்கள் ஏற்கனவே பதிவாகியுள்ளனர் என கொடக்கவெல பொதுச்சுகாதார ஆய்வாளர் விபுல குமார தெரிவித்தார்.

Related Articles

Back to top button