...
செய்திகள்

ஆடைத் தொழிற்சாலை இளம்யுவதி தூக்கிட்டு தற்கொலை

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதியொருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று (07) காலை வவுனியா நகருக்கு சென்ற சமயத்தில் வீட்டில் தனிமையில் நின்ற யுவதி அவரது வீட்டு அறையில் பஞ்சாவி துணியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளனர்.

தாய், தந்தை காலை 11 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிய நேரத்தில் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் அவதானித்து உடனடியாக மீட்டெடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போதிலும் யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

26 வயதுடைய தங்கவேல் திவியா என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் யுவதியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen