மலையகம்
ஆடை தொழிற்சாலையில் பெண்கள் மயக்கம் நோர்வூட்டில் சம்பவம்
நோர்வூட் நிவ்வெளி பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த பெண் ஊழியர்களில் 200 மேற்பட்டோர் திடீரென மயக்கமுற்று வீழ்ந்தமையினால் நோர்வூட் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டது
இவர்கள் இன்று (04.10.2017) ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது காலை 9.45 மணியளவில் திடீரென மயக்கமுற்றனர்.
மயக்கமுற்ற பெண் ஊழியர்கள் உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 800 பேர் வரை வேலை செயதுவருகின்றனர்.
வாயு கசிவினால் அல்லது காலை உணவு ஒவ்வாமையினால் இவ்வாறு திடீர் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிராபத்து இல்லை என்றும் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹட்டன் நிருபர்