செய்திகள்

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மறுஅறிவித்தல் வரை பூட்டு.

ஆட்பதிவு திணைக்களத்திலுள்ள அதிகாரிகளில் சிலர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையால் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை மட்டுப்படுத்த வேண்டியேற்பட்டுள்ளது.

அதற்கமை நாளை திங்கட்கிழமை முதல் சகல பிரதான மற்றும் மாகாண அலுவலகங்களின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடம்பெற மாட்டாது என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பித்து அதனைப் பெற்றுக் கொள்ள வருகை தருமாறு நாள் ஒதுக்கப்பட்டிருந்த நபர்களுக்கு குறித்த தினத்தில் அல்லது அதற்கு முன்னரே தபால் சேவையூடாக தனிப்பட்ட விலாசத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே போன்று தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கும் அதனை தயாரித்து அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் , திருமண வைபவங்கள் , கடவுச்சீட்டு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டையை துரிதமாக பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையுடையவர்கள் வார நாட்களில் 011-5226126/100 (பிரதான காரியாலயம்) , 091-2228348 (தெற்கு மாகாண காரியாலயம்) , 037-2224337 (வடமேல் மாகாண காரியாலயம்) , 065-2229449 (கிழக்கு மாகாண காரியாலயம்) , 024-2227201 (வடக்கு மாகாண காரியாலயம்) என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Related Articles

Back to top button