ஆன்மீகம்

ஆத்ம இசை நிகழ்ச்சியும் தியானமும்

சஹஜ யோகா இசை கலைஞர்ள்

ஆத்ம இசை நிகழ்ச்சியும் தியானமும் பிரபல சஹஜ யோகா இசை கலைஞர்களின் ஏற்பாட்டில் நாட்டில் பல மாவட்டங்களில் இந்நிகழ்வு ஜூலை மாதம் இடம்பெறவுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் கள் தெரிவிக்கின்றனர். .

அந்த வகையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி 04 மணிக்கு மட்டக்களப்பு தேவ நாயகம் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அதையடுத்து ஜீலை 10 திகதி அன்று மாலை 04 மணிமுதல் 06 மணிவரை கண்டி இந்து கலாச்சார நிலையத்திலும்

12 திகதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை நுவரெலியா சினி சிட்டா நகர மண்டபத்திலும்.

13 ம் திகதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி‌ சுவாமி தேவஸ்தானம் பிரதான மண்டபத்திலும் நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .

இம்மாதம் 17 திகதி அன்று கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்திலும் இசை நிகழ்ச்சிகள் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொண்டு ஆன்மீக கருத்துக்களை பெற்றுக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்வதோடு இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றார்கள்.

நடைபெறும் அனைத்து நிகழ்வுகளில் விஷேட ஆன்மீக சொற்பொழிவுகள் பக்தி கீதங்கள் யோகா கலை உள்ளிட்ட ஆன்மீக ரீதியான நிகழ்வுகள் நடைபெற உள்ளமை விசேட அம்சமாகும்

Related Articles

Back to top button