உலகம்
ஆப்கானில் நிலநடுக்கம்; 26 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
உயிரிழந்த 26 பேரில், 5 பெண்களும், 4 சிறார்களும் அடங்குவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தினால் 700ற்கும் அதிகமான வீடுகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிக்கு மீட்புப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மணிநேரத்திற்கு பின்னர், 4.9 ரிக்டர் அளவிலான மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் 280 பேர் உயிரிழந்திருந்தனர்.