அரசியல்செய்திகள்

ஆயிரம் ரூபா தொடர்பில் செந்தில் மற்றும் ஜீவன் மகிந்தவுடன் சந்திப்பு.

பெருந்தோட்ட தொழிலார்களின் 1000 ரூபாய் சம்பள விடயம் தொடர்பாக கம்பணிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில்  இணக்கப்பாடு  எட்டப்படாத நிலையில்  இவ்விடயம் சம்பள நிர்ணய சபைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனடிப்படையில் சம்பள நிர்ணைய  சபை ஊடாக இன்றைய தினம்  தொழிற்சங்கங்கள், மற்றும் கம்பணி ஆகிய இரு தரப்புக்கும் இடையில்  பேச்சுவார்த்தை இடம்பெற்றது. 
இதன் போது முதலாளிமார் சம்மேளனம் 585  ரூபாய் சம்பளத்தை முன்வைத்தனர். 

ஆனால் தொழிற்சங்கங்கள் ஆயிரம்  ரூபாவை முன்மொழிந்த நிலையில் நிர்னைய சபை  900ரூபாவை  அடிப்படை சம்பளமாகவும் 100 ரூபாய் வரவு செலவு திட்டத்தின் ஊடகவும் முன் மொழியப்பட்டது. 

இதன்போது  பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநதிகள்இ தரப்பில் இரண்டுபேரும், கம்பணிகள் தரப்பில்  எட்டு பேரும் நிர்ணைய சபை தரப்பில் ( அரச தரப்பு) சார்பில்  மூவருமாக 19 பேர்  கலந்து  கொண்டனர். 
இதன் போது இருதரப்புக்கும் இடையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில்  இரு தரப்பினரும் சமனான முறையில் வாக்களித்திருந்தனர்.

இதனை அடுத்து அரசாங்கத்தரப்பில் அளிக்கப்பட்ட 3 மேலதிக வாக்குகளால் இப்பேச்சுவார்த்தையில் தோழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்குவதாக சம்பள நிர்ணய சபையின் மூலம் இறுதி முடிவு எட்டப்பட்டது.
 

மேலும் சம்பள நிர்ணய சபையினால் முன் மொழியப்பட்ட 1000 ரூபாய்  சம்பளத்துக்கான பிரேரணை இரண்டு வாரங்களின் பின்னர் அங்கீகரிக்கப்படும். 

அத்தோடு பெருநதோட்ட தொழிலார்களின் 1000 ரூபாய்  சம்பள அதிகரிப்பு விடயம் தொடர்பாக இன்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் வெற்றியின் பின்னர் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்சவை ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரேலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்ததனை படங்களில் காணலாம்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com