செய்திகள்மலையகம்

ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் திணைக்களம் தெரிவிக்கின்றது.

ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு, அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் திகதி தொடக்கம் செல்லுபடியாகும் வகையில் பெருந்தோட்டத் தொழிலார்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாவும் வரவு செலவுத் திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி நியூஸ் பைஸ்ட்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com