செய்திகள்மலையகம்

ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளமாக வழங்க இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக வழங்க இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இ.தொ.கா முன்வைத்த 900 ரூபாய் அடிப்படைச் சம்பளமாகவும் 100 ரூபாய்  பட்ஜட் கொடுப்பனவுமாக இணைத்து, ஆயிரம் ரூபாயை வழங்க இறுதித் தீர்மானம்  எட்டப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு  தொடர்பில், தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே, இவ்வாறு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.அதேநேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1000 சம்பள விடயத்தில்  கோரிக்கையொன்றை  முன்வைத்து அதனை சம்பள நிர்னயசபை பரிசீலனை செய்து    ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

இதன்போது அரசாங்க தரப்பில் 3 பேரும் தொழிற்சங்கம் சார்பாக 8 பேரும் தோட்ட கம்பனிசார்பாக 8 பேரும்  கலந்துக்கொண்டனர். இதன்போது தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இ.தொ.கா.ஊடக பிரிவு

Related Articles

Back to top button