சினிமா

ஆயுத பூசையை முன்னிட்டு 4 திரைப்படங்களின் முக்கிய அறிவிப்புகள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஆயுத பூஜை என்பது ஒரு முக்கிய திருவிழாவாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு நான்கு திரைப்படங்களின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அதன்படி நடிகர் சூர்யாவின் சகோதரர் கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் டிரைலர் நேற்றிரவு 7 மணிக்கு வெளியாகியது.
எதிர்வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ள இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஜி.வி. பிரகாஷ்குமார் நடிப்பில் இயக்குநர் எழிலன் இயக்கத்தில் உருவாகி வரும் ஆயிரம் ஜென்மங்கள்  திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பிரபுதேவா நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபெர்ஸ்ட் லுக்கும் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

இந்த டைட்டில் மற்றும் ஃபெர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மீசையை முறுக்கு மற்றும் நட்பே துணை ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் மூன்றாவது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. 

இந்த திரைப்படத்துக்கு நான் சிரித்தால் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 
இயக்குனர் சுந்தர் சி யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.

Related Articles

Back to top button
image download