மலையகம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான வேதன உயர்வு கோரி, மறே தோட்ட மக்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்கள் உரிய முறையில் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு, இந்தமுறை தமக்கு 1000ரூபா அடிப்படை வேதம் பெற்று கொடுக்க வேண்டுமென ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், இந்த மாதத்துடன் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைகின்ற நிலையில், எதிர்வரும் 16ம் திகதிக்கு முன்பாக புதிய வேதனத்தொகை மற்றும் சலுகை விடயங்களுக்கான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.

எனினும் இதுவரையில் முதலாளிமார் சம்மேளனத்துக்கும், கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் ஒருசுற்று பேச்சுவார்த்தை மாத்திரமே இடம்பெற்றுள்ளது.

முதல்சுற்று பேச்சுவார்த்தை தீர்மானம் இன்றி நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான திகதியை தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம் கோரியுள்ளனர்.

எனினும் இன்னும் அதுதொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திடம் இருந்து பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button