ஆறுமுகன் தொண்டமாணை சந்தித்த தமிழ் நாடு அமைச்சர்

இந்திய தமிழ் நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு கொழும்பில் உள்ள ஆரம்ப கைத்தொழில் அமைச்சகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஆறுமுகன் தொண்டமானை சந்தித்து மலையகப் பிரதேசத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நிலவும் பிரச்சினைகள் சம்மந்தமாகவும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் உள்ள அனைத்து பிரதேசங்களில் உள்ள நூலகங்களுக்கு ஒரு தொகை நூல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய வம்சாவளி மக்கள் வாழும் மலையகபிரதேசத்திற்கும் ஒரு தொகை நூல்கள் வழங்கப்படும் எனவும் கலந்துரையாடலின்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சந்திப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஆரம்ப கைதொழில் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்ம், மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவிப் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை இந்தியப் பேரவையின் உறுப்பினர்கள் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.