ஆறுமுகன் தொண்டமானின் மோசமான செயலை கண்டிக்கும் கல்லூரியினர்

ஹற்றனில் பிரசித்தி பெற்ற புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிதியாக ஆறுமுகன் தொண்டமான் அழைக்கப்பட்டிருந்தார்.
போட்டி நிகழ்வுகள் டன்பார் மைதானத்தில் கடந்த 09.02.2019 பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டு ஆறுமுகனின் முழுமையான சம்மதத்துடனே ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் இன்றைய நிகழ்வுக்கு இ.தொ.கா.வின் ஏனைய உறுப்பினர்கள் நேரகாலத்தோடு வருகை தந்திருந்தபோதிலும் மாலை 3.30 மணிவரை ஆறுமுகன் சமூகம் தரவில்லை. ஆறுமுகனுக்காக பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், அதிதிகள், விருந்தினர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைவரும் காத்திருந்தனர். அவர் வருகை தரும் சரியான நேரத்தையும் யாருக்கும் அறிவித்திருக்கவில்லை.
இவ்வாறிருக்கையில் பிற்பகல் 3.45 மணிக்கு வருகை தந்த ஆறுமுகன் நிகழ்வுக்குச் சமூகம் தராமல் உடனடியாகத் திரும்பிச் சென்றுள்ளார். அவர் வரும் வழியில் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையே இதற்குக் காரணம் என அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரைக் கெஞ்சி அழைத்த போதும் மறுப்புத் தெரிவித்துவிட்டு, வாகனம் அதி வேகத்தில் பயணித்துள்ளது.
இது முழுப்பாடசாலையின் கல்விச் சமூகத்தை மாத்திரமல்லாது மலையகத்தையும் அவமதித்த செயலாகவே கருத்துவதுடன். மலையகத்தின் முதல் நீதவானை, பேராசிரியர்களை, கல்விமான்களை, ஊடகவியலாளர்களை, துறைசார் நிபுணர்களை உருவாக்கிய கல்லூரிக்கு ஆறுமுகன் கொடுத்த பரிசு இதுதானா? அதிகாரமும் அகங்காரமும் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்றியிருக்கின்றன என்பதற்கு இது நல்லதோர் உதாரணம்.
என அக் கல்லூரியினை சார்ந்த பலர் விசனம் தெரிவித்து வருகின்றனர்.