மலையகம்

ஆற்றிலிருந்து ஆறு வயது மாணவனின் சடலம், பெற்றோர்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானம்!

திம்புள்ள , போகாவத்தை பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து ஆறு வயது மாணவனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சடலம் போகவத்தை பகுதியினை வசிப்பிடமா கொண்ட ஆறு வயதுடைய ராஜேந்திரகுமார் அஸ்வின் என அடையாளம் காணப்பட்டுள்ளது ,
இம்மாணவன் நேற்று (11.11.2017) 1.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள், பிரதேசவாசிகள் பிரதேசம் முழுவதும் உறவினர் வீடுகளிலும் தேடியுள்ளனர். இவர் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் இன்று (12.11.2017 ) காலை ஆற்றில் சடலமாக கிடப்பதை பொதுமக்கள் கண்டுள்ளனர்.
இம்மாணவன் ஆற்றருகில் இருக்கும் கொய்யா மரத்தில் கொய்யாப்பழம் பறிக்கச்சென்று தவறி விழுந்தே இறந்திருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக அட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button