ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்
பொகவந்தலாவ – லொய்னோன் தோட்டபகுதியில் உள்ள ஆறு ஒன்றில் இருந்து 17வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விவசாய தோட்டத்திற்கு வரிச்சி வகைகளை வெட்டுவதற்காக சென்ற சிறுவனே சடலமாக மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆற்று பகுதிக்கு சென்ற சிறுவனை காணவில்லை என தோட்ட பொதுமக்களும்
உறவினர்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் நீண்ட லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள ஆற்றில் சடலமாக கிடந்தை கண்டு ஸ்ரீ உடனடியாக பொகவந்தலாவ பொலிஸாருக்கு பொது மக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
தகவல் அறிந்த பொகவந்தலாவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை
மீட்டு பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
உயிரிழந்த சிறுவன் ராத கிருஸ்சாந்தன் (வயது17) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுவனின் தாய் கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் தனது தந்தையின் பாராமரிப்பில் இந்த சிறுவன் வளர்ந்து வந்ததாகவும் பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்துதெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.