செய்திகள்நுவரெலியாமலையகம்

ஆற்றில் தவறி விழுந்த இளைஞன் உயிரிழப்பு – கொத்மலையில் சம்பவம்.

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவில் உள்ள ஆற்றில் இளைஞன் ஒருவர் நேற்று தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

குறித்த இளைஞன் அவரது பயிர்செய்கையை பார்வையிட்டு வீடு திரும்பும் சந்தர்ப்பத்திலேயே  இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 

தவறி விழுந்த இளைஞனை உடனடியாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

24 வயதுடைய ராஜேந்திரன் நவீந்திரன் என்ற இனைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
image download