அரசியல்செய்திகள்

ஆளும் கட்சியின் பிரதான கொரடா உள்ளிட்ட பதவிகள் தொடர்பில் கலந்துரையாடல்.

ஆளும் கட்சியின் பிரதான கொரடா மற்றும் சபை முதல்வர் என்போரை தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் எதிர்வரும் இரண்டாம் திகதி நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்றைய தினமே ஆளுங்கட்சியின் குழுக்கூட்டம் மற்றும் கட்சி ததலைவர்களின் கூட்டமும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆளும் கட்சியின் பிரதான கொரடா மற்றும் சபை முதல்வர் ஆகிய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் மூன்றாம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது.

நாட்டின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஷபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டதையடுத்து, கூடவுள்ள முதலாவது நாடாளுமன்ற அமர்வு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி அன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஷபக்‌ஷவின் சிம்மாசன உரையை அடுத்து பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button