செய்திகள்

ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று.

2004 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு
நாளை இரண்டு நிமிடங்கள் மௌனஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, இன்று காலை 09.25 தொடக்கம் 09.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி
செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதினாறு வருடங்களுக்கு முன்னர் இன்று போல் ஒருநாளில் , 14 நாடுகளில் மக்களின்
குடியேற்றப் பகுதிகளை ஆக்கிரமித்த இராட்சத அலைகள் இரண்டு இலட்சத்து
50ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்களை பறித்துச் சென்றன.

சுமார் 13 ஆயிரம் தீவுகளை உள்ளடக்கிய சிறிய ராஜ்யமே இந்தோனேஷியாவில் , சற்றும்
எதிர்பாராத தருணத்தில் ஏற்பட்ட பேரிடரால் இடம்பெயர்ந்த மில்லியன் கணக்கான
மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இலங்கை நேரப்படி காலை 6.58 அளவில் இந்தோனேஷியாவின்
சுமத்திரா தீவிற்கு அண்மித்த கடற்பரப்பை ஆழிப்பேரலை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

நிலஅதிர்வு இடம்பெற்ற இடத்திலிருந்து 1600 கிலோ மீற்றர் தொலைவிலேயே இலங்கையின்
அமைவிடம் காணப்பட்டது.

உடனடியாக இதன் தாக்கம் உணரப்படாத நிலையில் இலங்கையின் கரையோரம் வழமைபோன்று
ரம்மியமாக காட்சியளித்தது.

நிலஅதிர்வு இடம்பெற்று 30 செக்கன்களில் இந்தோனேஷியாவில் ஆழிப்பேரலை
ஊழிக்கூத்தாட தொடங்கியது.

யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு, திருகோணமலை , அம்பாறை , மட்டக்களப்பு உட்பட வடக்கு
கிழக்கு கரையோர பிரதேசங்கள் மற்றும் காலி , மாத்தறை ,ஹம்பந்தோட்ட மற்றும்
களுத்துறை உள்ளிட்ட தென் கரையோர பிரதேசங்களை ஆழிப்பேரலை அள்ளி விழுங்கியது.

எமது நாட்டில் சுமார் 35 ஆயிரம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமானவர்களின் உயிர்கள்
சுனாமியால் காவு கொள்ளப்பட்டன

சுனாமியினால் 979 குழந்தைகள் பலியாகினர்.

மேலும் 3 ஆயிரத்து 954 குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்.

சுனாமியால் உலகளாவிய ரீதியில் சுமார் 9000 மில்லியன் அமெரிக்க டொலர்
சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன.

Related Articles

Back to top button
image download