செய்திகள்

ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு அட்டனில் அஞ்சலி நிகழ்வு!

ஆழிப்பேரலையில் உயிர் நீர்த்தவர்களின் 16ஆவது நினைவு தினம் மலையகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலையில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர்.

இந்த நாளில் காலை 9.25 தொடக்கம் 9.27 வரை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது.

அந்த வகையில் 16 ஆம் ஆண்டு நிறைவையொட்டி அட்டன் நகர மணிக்கூட்டு சந்தியிலுள்ள சமன் போதியிலும் பௌத்த விகாரைகள், இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மெழுகுவர்த்தி ஏற்றி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் மஸ்கெலியா,பொகவந்தலாவ, நுவரெலியா நகரங்கள் மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com