செய்திகள்

ஆஸ்ட்ரா செனேக்கா : 2ம் கட்ட தடுப்பூசி எதிர்வரும் மூன்று வாரங்களில்….

இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் ஆஸ்ட்ரா – செனெக்கா தடுப்பூசிகளில், இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை எதிர்வரும் மூன்று வாரங்களில் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்ட்ரா செனெக்காவின் முதல் தடுப்பூசி ஏற்றப்பட்டு 14 முதல் 16 வாரங்களுக்குள் இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும். இந்நிலையில் முதல் தடுப்பூசி ஏற்றப்பட்டோருக்கு, இரண்டாவது தடுப்பூசியை வழங்க இன்னும் 4 வாரங்களே உள்ளது. இதனை கருத்திற் கொண்டு, இரண்டாம் கட்டத்திற்கு தேவையான 6 இலட்சம் தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button