உலகம்

இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவு.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். 

இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் கதிரையிலும் அமர்வதற்கான தகுதியை பெறுவார்.அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக போரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜோன்சனுக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெராமி ஹண்டுக்கும் இடையே இன்று போட்டி இடம்பெற்றது. இதனையடுத்து போரிஸ் ஜோன்சன் ஏகமனதாக பிரதமர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Related Articles

Back to top button