விளையாட்டு

இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் ஹார்வி எலியட் படுகாயம்.

இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் ஞாயிறன்று நடந்த ஆட்டத்தில் லிவர்பூல் வீரர் ஹார்வி எலியட் படுகாயமடைந்தார், அவரது கால் இரண்டாக உடைந்த பயங்கரம் நிகழ்ந்ததில் லிவர்பூல் அணி வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

லீட்ஸ் யுனைடெட் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணி வீரர் தூக்கி அடித்த பந்தை வலது புறம் வாங்கி அபாரமாக எடுத்துச் சென்றார் ஹார்வி எலியட் அப்போது லீட்ஸ் யுனைடெட் அணி வீரர் பாஸ்கல் ஸ்ட்ரூய்க் இடையில் காலைவிட்டு டேக்கிள் செய்தார். இதனால் நிலைதவறி கீழே விழுந்தார் எலியட்.

இதனைப் பார்த்த மற்றொரு லிவர்பூல் வீரர் மொகமட் சலா உடனே மருத்துவ உதவியை அழைத்தார்.

கால் உடைந்த ஹார்வி ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லப்பட்டார். இது லிவர் பூல் அணியின் 3-0 வெற்றியைத் தடுக்க முடியவில்லை, ஆனால் இப்படி அபாயகரமாக டேக்கிள் செய்த பாஸ்கல் ஸ்ட்ரூய்ட் சிவப்பு அட்டைக்காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ஹார்வி எலியட் ஒரு ப்ராடிஜி என்று அழைக்கப்படுபவர் 16வயதில் ஃபுல்ஹாம் அணிக்காக இங்கிலிஷ் பிரிமியர் லீக் கால்பந்தில் அறிமுகமானவர். இந்நிலையில் இவரது கால் உடைந்ததால் இவர் மீண்டும் கால்பந்து ஆடுவதே சந்தேகமாக இரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Related Articles

Back to top button
image download