சினிமாசிறப்புசெய்திகள்

இசைக்கு போதை தந்தவருக்கு இன்று பிறந்தநாள்.!

கடந்த 45 வருடங்களாக தமிழ் சமூகத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் தனது இசை மந்திரத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. தமிழகத்தின் பாரம்பரிய இசையை, கடல் கடந்து சிறப்புற செய்ததில் இளையராஜாவின் பங்கு மிக அதிகம். அதிலும் குறிப்பாக, இசை என்பது குறிப்பிட்ட சாரார் மட்டுமே கேட்கவும், ரசிக்கவும் முடியும் என்று இருந்த காலகட்டத்தில், சாமானியனையும் ரசிக்க செய்தவர் ராஜா மட்டுமே.

1976-ல் ’அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களை நிறைவு செய்து, இசை ரசிகனின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி என பல மொழிகளிலும் இசையமைத்துள்ளார். சிம்பொனி இசையமைப்பு, ’பஞ்சமுகி’ என்ற கர்நாடக ராகம் உருவாக்கம், இசை ரசிகர்களுக்கு புதிய பரிணாமத்தை அறிமுகம் செய்த, ’ஹவ் டு நேம் இட்’, ’கீதாஞ்சலி’ என்ற பக்தி இசைத் தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் செய்துள்ளார்.

தனது இசைக்காக இந்திய அரசின் உயரிய விருதான, ’பத்ம விபூஷண்’ விருதையும், 5 முறை தேசிய விருதையும், தமிழக அரசின் ’கலைமாமணி’ விருதையும் பெற்றுள்ள இவர், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழும் இசையும் போல என்றும் செழிப்புடன் வாழ இசைஞானி இளையராஜாவை malayagam.lk வாழ்த்துகிறது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com