வலப்னை கல்வி திணைக்கள இடமாற்ற சபை மற்றும் அதிபர் ஒருவர் மீது நுவரெலியா மாவட்ட நீதிமன்றதில் பெண் ஆசிரியை ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குறிப்பிட்ட பாடசாலையொன்றில் 08 வருடங்கள் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றங்கள் நடைபெறுகின்ற போதும். பல வருடங்களாக வலப்னை கல்வி திணைகளதிற்க்கு உட்பட பாடசாலைகளில் இடம்மாற்றம் நடைபெறாத நிலையில்,இவ் வருடம் ஆரம்பத்தில் இடமாற்ற சபையினால் மேற்கொள்பட்டுள்ள இடமாற்றத்தில் தான் 08 வருடங்கள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் தமக்கு இடம்மாற்றம் வழங்கப்பட்டது தொடர்பாகவே குறித்த ஆசிரியை உரிமை மீறல் வழக்கொன்றினை பதிவு செய்துள்ளார்.
குறித்த வழக்கு பாடசாலையின் அதிபர் உட்பட கல்வி திணைகள அதிகாரிகள் மீதே பதியப்பட்டுள்ளது.இந்த உரிமை மீறல் தொடர்பான வழக்கு விசாரணை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தால் எதிர்வரும் 5.6.2018 திகதி விசாரிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.