செய்திகள்

இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.!

ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் இன்று பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றது.

அத்துடன் நாட்டின் கிழக்கு கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button