செய்திகள்

இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் தினங்களிலும் எதிர்ப்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் , மத்திய, ஊவா , சப்ரகமுவ , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்தி அறிக்கையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேல் , தென் மற்றும் வடமேல் கடலோர பிரதேசங்களில் காலை நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதேவேளை , இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் கடும் மின்னலுடன் மணிக்கு சுமார் 70-80 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வானி​லை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

39 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button