செய்திகள்

இடி, மின்னலுடன் மழை : பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.!

ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் பல இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் சிறிதளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் கிழக்கு கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன்கூடிய மழை பெய்யும்போது வெட்டவெளியிலோ மரங்களுக்கு கீழோ இருக்காமல் பாதுகாப்பான கட்டிடங்களிலோ அடைக்கப்பட்ட வாகனங்களிலோ தங்கி இருக்குமாறு வளிமண்டல வியல் திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றது. மேலும் வயல் வெளி,தேயிலை தோட்டம், மைதானம் மற்றும் நீர் நிலைகள்போன்ற வெளிப்பிரதேசங்களில் தங்கி இருக்கவேண்டாம் என்றும் அதேபோன்று வயறுடனான தொலைபேசி மற்றும் மின்சாரத்துடன் தொடர்புடைய உபகரணங்களை பாவனை செய்வதையும் துவிச்சக்கர வண்டி உழவு இயந்திரம் படகு போன்ற திறந்த வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button