உலகம்செய்திகள்

இடி மின்னல் தாக்கியதில் 68 பேர் பலி..!

இந்தியாவின் உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நேற்று ஒரே நாளில் பதிவான மின்னல் தாக்க சம்பவங்களில் மொத்தம் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

இடிமின்னல் தாக்கம் காரணமாக மேலும் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தின் பல பகுதிகளிலும் நேற்றிரவு நிலவிய இடிமின்னல் தாக்கம் காரணமாகவே இவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஏழு குழந்தைகளும், பெண்களும் அடங்குகின்றனர்.

இடி மின்னல் தாக்கம் ஏற்பட்ட போது செல்பி எடுக்க முற்பட்டவர்களே இவ்வாறு உயிரிழந்தததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்கள் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வசித்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இறந்தவர்களின் குடும்பத்தினர்க்குத் தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் மழைக்கும் மின்னலுக்கும் கால்நடைகளைப் பறிகொடுத்தவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து இருக்கிறார்.

Related Articles

Back to top button