செய்திகள்

இணையத்தில் சிறுமி விற்பனை : இருதய சத்திரசிகிச்சை நிபுணர் விளக்கமறியலில்

கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருதய சத்திரசிகிச்சை நிபுணர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

15 வயது சிறுமி பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள பிரபலமான வைத்தியசாலையொன்றின் 41 வயது இருதய நோய் நிபுணர் ஒருவரும் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டார். குறித்த இருதய நோய் நிபுணர் பண்டாரகமையை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுமியின் தாய், மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட 34 சந்தேகநபர்கள் கைது செய்யபப்பட்டுள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரான மொஹமட் அஷ்மலி, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

A woman’s hands in front of her face.

Related Articles

Back to top button