செய்திகள்

இணையத்தில் விற்கப்பட்ட 15 வயது சிறுமி விவகாரத்தில் தொடர்ந்தும் சிக்கும் முக்கிய புள்ளிகள்

கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை இன்று (06/07) தெரிவித்தார். கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள பிரபலமான வைத்தியசாலையை சேர்ந்த இருதயநோய் நிபுணர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கல்கிசையில் 15 வயதான சிறுமியொருவர் பாலியல் நடவடிக்கைகளுக்காக பலருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுமியின் தாய், மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட 34 சந்தேகநபர்கள் கைது செய்யபப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரான மொஹமட் அஷ்மலி, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button