செய்திகள்

இணையவழி கற்பித்தலில் இருந்து விலகும் ஆசிரியர் சங்கம்..!!!

இன்று முதல் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகிக்கொள்வதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தத் தொழிற்சங்க போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், அதிபர் சேவையாளர் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்கள் ஆதரவு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு 08 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்படட நிலையில், இவர்களில் தேரர்கள் இருவர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 11 பேர் கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தியமை அரச அடக்குமுறையின் உச்சக்கட்டமாகவே கருத முடியும் என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button