கல்விசிறப்புசெய்திகள்

இணையவழி கல்வி வழிகாட்டல் கோவை உள்ளே.!

மாணவர், ஆசிரியர், பெற்றோரின் ஆரோக்கியத்தை காத்தே இணையவழி கல்வி முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவு முழுமையாக இதோ:

மாணவர், ஆசிரியர், பெற்றோரின் ஆரோக்கியத்தை காத்தே இணையவழி கல்வி முன்னெடுக்கப்பட வேண்டும்:

வழிகாட்டி – நாடு தற்போது சந்தித்திருக்கும் மிக நெருக்கடியான கோவிட் தொற்றுநோய் பரவல் காலகட்டத்தில் – தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்புச் செயற்பாடாக, நாட்டின் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.

ஆனாலும் – மாணவர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையினால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு, கற்றல் செயற்பாடுகள் பின்தங்கிவிடவும் நாங்கள் அனுமதிக்க முடியாது.

அதன் காரணமாகவே – இணைய வழி மற்றும் நிகழ்நிலை தொழில்நுட்ப கல்விச் செயற்பாடுகள் எமது அனைத்து மாணவர்களுக்காகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் – இந்த இணைய வழி கல்வி செயற்பாடுகள், உரிய, பொருத்தமான, வழியில் முன்னெடுக்கப்பட வேண்டியது – மாணவர்களினது மட்டுமன்றி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் உள மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது.

அதன் காரணமாகவே – சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய துறைசார் நிபுனர்களின் பங்களிப்புடன் – இணைய வழி மற்றும் நிகழ்நிலை கல்வி வழிமுறைக் கோவை ஒன்றினை எமது கல்வி அமைச்சு தயாரித்துள்ளது.

காலத் தேவையின் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்ந்து – இந்த வழிகாட்டல் கோவை தயாரிப்பு பணியில் பங்களித்த அனைவருக்கும் எமது நாட்டின் கல்விச் சமூகத்தின் சார்பாக எனது நன்றிகள் ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் இதனைமுழுமையாகப் படித்து விளங்கிக்கொண்டு – இந்த வழிகாட்டல்களைச் சரிவரப் பின்பற்றி – தமது மன ஆரோக்கியத்தையும், எமது நாட்டை நாளை தாங்கி நிற்கப் போகின்ற எமது மாணவச் செல்வங்களின் மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகின்றேன்.

6-7 years cute child learning mathematics from computer.
May be a cartoon of text
May be an image of text that says 'இணையவழிக் கல்வி வழிகாட்டல் கோவை இணையவழிக் கல்வி வழிகாட்டல் கோவை Page 2'
May be an image of text
May be an image of text that says 'ஒழுங்கமைப்பு .அறிமுகம் இணையவழி மூலமாக இ-கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்கையில் ஒவ்வொரு தரப்பினரதும் கடமைகள் மற்றும் பொறுப்புகள். மாணவ மாணவிகள் பெற்றோர்/ பாதுகாவலர் ஆசிரியர்கள் அதிபர்கள் .ஆசிரியர் பயன்படுத்தக்கூடிய கற்றல் துணைக் கருவிகள் இணையவழி இணையவழி கற்றல்- கற்பித்தல் செயற்பாட்டில் ஏற்படும் சிக்கல்கள் நிலைமைகளின் போது செயற்பட வேண்டிய விதம். இணையவழிக் கல்வி வழிகாட்டல் கோவை Page 3'
No photo description available.
No photo description available.
May be an image of text that says 'இணையவழி மூலமாக கற்றல்- கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொள்கையில் ஒவ்வொரு தரப்பினரதும் கடமைகள் மற்றும் பொறுப்புகள். மாணவர்கள் இணையவழி மூலமாக ஒரு பாடத்தினை கற்கின்ற போது பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள். 1.1 பாடத்தில் கவனத்தினை செலுத்துவதற்காக பொருத்தமான சூழலை தெரிவு செய்தல் (இதற்கென பெற்றோர்/முத்தவர்களின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்ளவும்) மற்றும் பொருத்தமான பொருந்தக்கூடிய உடைகளை அணிந்து பாடத்தில் இணைந்து கொள்ளல். 1.2 பாடங்களுக்கு இணையவழி மூலமாக தொடர்பு கொள்கையில் பாடங்களை தவறவிடாது இருப்பதற்காக பொருத்தமான வகையில் காலத்தினை ஒதுக்கிக் கொள்வதற்கு நாளாந்த/ வாராந்த நேரசூசியை இற்றைப்படுத்தல் மற்றும் அதனை எப்போதும் கண்களுக்கு புலப்படக்கூடிய ஓரிடத்தில் பார்வைக்கு வைத்தல். 1.3 இணையவழி கற்றல் செயற்பாட்டில் இணைகின்ற போது ஆசிரியர் கூறும் ஆலோசனைகளை களை பின்பற்றுதல். இணையவழிக் கல்வி வழிகாட்டல் கோவை Page'
May be an image of text that says 'கற்றல் இடைநடுவில் தமது கருத்தினைக் கூறுகின்ற போது மாத்திரம் Unmute செய்தல். கேள்விகளைக் கேட்கின்ற போது பதிலளிக்கின்ற போது Hand raise அல்லது செய்தல். அத்தியாவசிய தகவல்களை வழங்குவதற்கு Chat box ஐ பயன்படுத்தவும். ஆசிரியரால் அறிவுறுத்தல் வழங்க அவசியமாகும் சந்தர்ப்பங்களில் video வை on செய்யவும். 1.4 இணையவழிக் கற்றல் செயற்பாட்டில் இணைகின்ற போது முறையாக அமர்ந்து பங்குபற்றுதல். 1.5 கற்றலுக்கு தடையாக அமையும் விதமாக ணவு உண்ணுதல் போன்ற செயற்பாடுகளை வரையறுத்தல். இணையவழிக் கல்வி வழிகாட்டல் கோவை Page'
May be an image of text that says 'பெற்றோர்/ பாதுகாவலர்களின் பொறுப்புகள் மற்றும் வகிபாகம். நேரசூசி தொடர்பில் முன்னறிவிப்பு சூழலை வானொலி தடையாக பிள்ளைகளின் அடிப்படைத் தேவை தொடர்பில் தெளிவுக் கொண்டிருத்தல். பிள்ளைகளுக்கு செய்தல். தடையின்றி உரிய பாடத்தில் இணைந்து கொள்வதற்கான வீட்டில் உருவாக்குதல். (தொலைக்காட்சி, ஆகியவற்றினை செயற்படுத்துவதன் மூலம் ஏற்படும் சத்தங்கள் அமைதல், வீட்டில் உள்ளவர்களின் உரையாடல்களை வரையறை செய்தல்.) முடியுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிள்ளைக்கும் ஆசிரியருக்கும் இடையில் இடம்பெறும் தொடர்பாடலை மேற்பார்வை செய்தல். இணையவழி கற்றலில் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு ஒத்துழைத்தல். (பிள்ளையை உடல் மற்றும் உள நீதியான தாக்கங்களுக்கு உட்படுத்தாது பாடத்தில் கவனத்தினை செலுத்த சந்தர்ப்பமளித்தல்.) அமர்ந்தே செய்யும் செயற்பாடுகளில் மாத்திரம் பிள்ளைகளை ஈடுபடுத்தாமல் பாடவேளை இடைவேளைகளின் போது வெளிச்சூழல் செயற்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுத்துவதற்கு பெற்றோரையும் இணைத்துக் கொள்ளல். கொ இணையவழிக் கல்வி வழிகாட்டல் கோவை பிள்ளைகளை Page 8'
No photo description available.
May be an image of text that says 'எனவே அது தொடர்பில் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அறிமுகம் செய்யப்பட் டுள்ள கட்டுப்பாட்டுப் பாவனை மென்பொருள் ஒன்றினை (child control software) கையடக்கத் தொலைபேசியில் நிறுவுவதன் அவசியமற்ற நடவடிக்கைகளை மூலமாக பிள்ளைகள் (install) இ ணை கட்டுப்படுத்தும் வாய்ப்பு உள்ளது கையா ளும் அமைத்தல். கற்றலுக்கு பொருத்தமான இணையவழி கற்பித்தலை மேற்கொள்கையில் கற்றல் வடி டிக்கைகளுக்கு பொருத்தமான இடத்தினை அமைத்துக் கொடுக்க வேண்டும். அந்த இடம் அமைதியான, பிள்ளையின் கவனம் வேறு திசைகளுக்கு செல்லாத தொடர்ச்சியான இணைய வசதியைப் பெறக்கூடிய, தூய்மையான காற்றோட்டமுடைய மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு மிக்கதான சூழலாக அமைதல் வேண்டுமென்பதனை பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இணையவழிக் கல்வி வழிகாட்டல் கோவை Page 10'
No photo description available.
No photo description available.
May be an image of text that says 'மனவழுத்தம் மற்றும் அசாதாரண நிலைமைகளை முறையாக முகாமைத்துவம் செயதல். இவ்வாறான எதிர்பாராத சூழ்நிலைகள் மக்களது அன்றாட நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறைகளில் குழப்பமான நிலைமையினை ஏற்படுத்தும். மாணவர்களின் உணர்வுகள் மற்றும் பயம் என்பன அதிகரிக்கக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெற்றோரது மனவழுத்தம் அதிகரிப்பதும் அதனால் பிள்ளைகள் மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடலாம். பிள்ளைகளின் வயதிற்கேற்ற விதமாக சரியான தகவல்களை வழங்குவதும் அவர்களிடம் காணப்படும் அவசியமற்ற பயத்தினை இல்லாது செய்வதனையும் மேற்கொள்ள வேண்டும். சமூக கபாவனையை வரையறை செய்தல் နနဇနပုရ இணையவழிக் கல்வி வழிகாட்டல் கோவை Page 13'
May be an image of text that says 'ஆசிரியரால் பயன்படுத்தக்கூடிய துணைக் கருவிகள் /tools இணையவழி கற்றல் Whats app Viber Zoom Cisco Webex zoom Microsoft team 小小 CISCO Webex இணையவழிக் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் எழக்கூடிய சிரமங்களைக் குறைத்துக் கொள்வதற்கு தொடர்புபடுத்திக் கொள்ளவேண்டியதரப்பினர். அல்லது பாடசாலையின் உரிய வகுப்பாசிரியர் அதிகாரிகள். கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கிளை அல்லது உரிய விடயப் பொறுப்புக் கிளை. மாகாண/ வலயக் கல்வி அதிகாரிகள். அலுவலகங்களின் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி சிறுவர் பாதுகாப்பு அதுகார சபை இணையவழிக் கல்வி வழிகாட்டல் கோவை Page 14'
May be an image of 2 people and text that says 'இணையவழிக் குற்றங்கள் இலங்கைப் பொலிஸ் முறைப்பாட்டு நிலையம் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவை இராஜாங்க அமைச்சு. Ed இணையவழிக் கல்வி வழிகாட்டல் கோவை Page 15'

Related Articles

Back to top button
image download