செய்திகள்

இதுவரையில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் தொடர்பான விபரம் இதோ.!

நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் இதுவரை 23 லட்சத்து 91 ஆயிரத்து 683 கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் (17) மாத்திரம் 11,349 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 43,040 பேருக்கு போடப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 107 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை 356,610 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 64,986 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீன நாட்டவர்களுக்கு 5300 சைனோ பார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button