செய்திகள்

இதுவரை காலம் குவைத்தில் இருந்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

 

விசா அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த  4000 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு பொதுமன்னிப்பின் அடிப்படையில்  திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலம் இம் மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையிலேயே இவ்வாறு திருப்பியனுப்பி வைக்கப்பட்டனர்.

குவைத்தில் இது வரையில் சுமார் 15 ஆயிரத்து 700 க்கும் அதிகமான இலங்கையர்கள் விசா அனுமதிப் பத்திரமின்றி தங்கியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் வேலைவாய்ப்புக்களுக்காக குவைத் சென்றவர்களாக கருதப்படுகின்றனர்.

மேலும் குவைத்தில் வசித்துவரும் ஏனைய இலங்கையர்களுக்கு விசா பெற்றுத் தரும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button