செய்திகள்

இதுவரை நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் முழு விபரம்

நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 1,423,239 பேருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக 28 இலட்சத்து 56 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. மேலும், 10 இலட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அதன் இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஒரு இலட்சத்து 14 ஆயிரம் பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 464 பேருக்கு இதன் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 இலட்சத்து 25 ஆயிரம் பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன், மூன்று இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு அதன் இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button