செய்திகள்

இதுவரை 25,886 பேர் கைது : காரணம் இதுதான்.!

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியிலும், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1,057 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரிய முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 27,977 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்புக்குள் உள்நுழையும் வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

பயணத்தடை அமுலில் உள்ள தற்போதைய காலப்பகுதியில் வாகனங்களில் பயணிப்போர் தொடர்பில் கருத்திற்கொண்டு பொலிஸாரினால் ஸ்டிக்கர்களை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது. குறித்த வேலைத்திட்டம் தற்போது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com