செய்திகள்

இதுவரை 40,674 பேர் கைது : காரணம் இதுதான்.!

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியிலும், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1,082 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரிய முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 40,674 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடகப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related Articles

Back to top button