செய்திகள்

இத்தாலியின் உதவியுடன் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின்சாரம்.

கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான தொழிநுட்ப உதவியை வழங்குவதற்கு இத்தாலி இணக்கம் தெரிவித்துள்ளது.

மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இத்தாலி தூதுவர் ரீடா ஜீ மெனெல்லாவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஒரு தடவைக்கு 100 முதல் 300 டொன் வரையான கழிவுகள் பயன்படுத்தப்பட்டு, மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கான மின்நிலையமொன்றை அமைப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக இத்தாலி தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவி மேலும் வலுவடையும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download