செய்திகள்

இத்தாலியில் அனல் பறக்கும் வெப்பம்

ஐரோப்பா கண்டத்தில் உள்ள இத்தாலியில் வழக்கத்து மாறாக கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இத்தாலியின் சிசிலி தீவில் 119 டிகிரி 8 பாரனைட் (48.8 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஐரோப்பா கண்டத்தில்  இதுவரை பதிவான வெப்பநிலையில் அதிகரித்த வெப்பநிலையாக இது இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இத்தாலியில்  பதிவான வெப்பநிலை சிசிலியன் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால் உலக வானிலை அமைப்பு (WMO) அதிகாரபூர்வமாக அதனை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

மேலும், ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவில் உள்ள மத்திய தரைக்கடலைச் சுற்றி தொடர்ந்து நிலவும் வெப்ப அலைகள் காரணமாக தீப் பரவல் சம்பவங்கள் பல பதிவாகியுள்ன.

இதற்கு முன்பு, ஐரோப்பாவில் வெப்பநிலை 48.0 டிகிரி செல்சியஸ் (118 ° F) 1977 இல் கிரேக்கத்தின் ஏதென்ஸில் பதிவாகியதாக  உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது.

இத்தாலியில் வெப்ப அலை வீசுவதால், சிவப்பு எச்சரிக்கையை அந்த நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. பல பிராந்தியங்களிலும், நகரங்களிலும் இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்ப அலை காரணமாக பல இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

சிசிலி, கேலபிரையாவில் 12 மணி நேரத்தில் 300 க்கும் மேற்பட்ட தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்களில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர் வெப்ப அலைகளால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடப்பதாகவும்  இத்தாலிய செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen