செய்திகள்

இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் பாடப் புத்தகங்களை அச்சிட கடதாசி இறக்குமதி !

எதிர்வரும் கல்வியாண்டுக்கான பாடசாலைகளில் அடிப்படைத் தேவைகளை எவ்வித தட்டுப்பாடும் இன்றி பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளின் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசிகள் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அடுத்தாண்டு பாடசாலை சீருடைகளுக்கு தேவையான பொருட்களை வழங்குவது குறித்து உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் சீன அரசுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபரிலும் 2022 தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை நவம்பர் மாதத்திலும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button