உலகம்

இந்தியாவின் மேற்குவங்கத்தில் குழந்தைகளை தாக்கும் நோய்.

இந்தியாவில் மேற்குவங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளுடன் 130 குழந்தைகள் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 2 குழந்தைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை உருவாக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், அவசியம் ஏற்படும் பட்சத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 130 குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button