செய்திகள்

இந்தியாவின் ‘​டெல்டா’ திரிபு கொரோனா வைரஸ் இலங்கை மீனவர்களிடையே பரவும் அபாயம்!

கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்களை தொடர்பு கொள்ளாதிருப்பதன் மூலம் இந்திய டெல்டா கொவிட் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுத்துக்கொள்ள முடியும் என இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பரவிவரும் டெல்டா கொவிட் திரிபு மிகவும் ஆபத்தான ஒன்றெனவும், இதனை நாட்டுக்குள் பரவவிடாமல் தடுப்பதற்கு விமான நிலையம், துறைமுகம் போன்ற இடங்களில் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும் என்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button