...
செய்திகள்

இந்தியாவிலிருந்து நாங்கள் இங்கு வரவில்லை -எஸ் சிறிதரன் தெரிவிப்பு

இந்தியாவிலிருந்து நாங்கள் இங்கு வரவில்லை. எங்களிலிருந்துதான் இந்தியாவில் சென்று திருமணம் செய்த வகைகளால் எங்களிற்கும் இந்தியாவிற்கும் அந்த தொப்புள் கொடி உறவு உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய ஆண்டியே புதிய இலட்சினை மற்றும் புதிய கொடியுடன் ஆண்டினை தொடங்கியிருக்கின்றீர்கள். ஒரு இனத்தினுடைய கொடி என்பது மிக முக்கியமானது. ஒரு இனம் தேசிய இனமா அல்லது இன குழுவா அல்லது அவர்கள் வெறுமனே பேசுகின்ற சிறிய அளவிலான குழுவாகவே புாய்விடுவார்களா என்றெல்லாம் உலகத்திலே பெரும் ஆய்வுகள் உள்ளது.

இரண்டாவது உலகப்போர் முடிந்ததற்கு பிற்பாடுதான் உலகத்தினுடைய சுயநிர்ணய உரிமை தொடர்பில் பேசப்பட்டது. முக்கியமாக ஒரு நாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் உள்ள நாடாக இருந்தால் அந்த நாட்டுக்குள் இன் சுயவுரிமை உள்ள நாடு பிரிய முடியாது. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றிருந்தால் அதுதான் அவர்களின் உயநிர்ணய உரிமை.

அவர்களின் தாயகம் அதுதான். அந்த நாட்டுக்குள்ளேயே அவர்கள் அடங்கிக்கொள்ள வேண்டும். இது உலக பந்திலே பெரும் சர்ச்சைகளை கொண்டு வந்தது. பல்வேறுபட்ட மொழி பேசுகின்ற மக்கள் வாழ்கின்ற, பல காலாச்சாரம் உள்ள, பல தேசிய இனங்களை கொண்ட நாடுகள் உலகத்தில் உள்ளது.

இலங்கையில் மரபுவழி தாயக அடைப்படையில் இனத்தின் அடையாளத்தை கொண்டவர்கள் தமிழர்கள். எங்களிற்கான மரபுவழி தாயகம், பூர்வீக வரலாற்றுவழி நிலம் எங்களிற்கு உண்டு. நாங்கள் வந்தேறு குடிகள் அல்ல. நாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அல்லது இந்திய தொப்புள்கொடி உறவுகள் என சிலர் வித்தியாசமாக பார்க்கின்றார்கள்.

எங்களிலிருந்துதான் இந்தியாவில் சென்று திருமணம் செய்தவகைகளால் எங்களிற்கும் இந்தியாவிற்கும் அந்த தொப்புள் கொடி உறவு உள்ளது. ஈழத்து மண்ணிலே நாங்கள் பஞ்ச ஈச்சரங்களை வைத்து இல்கையில் முதல் தோன்றிய மூத்த குடிகளாக நாங்கள் வாழ்ந்தவர்கள்.

ஆகவே எங்களிற்கான இந்த நில அடையாளம், நாங்கள் இன்று பேசுகின்ற செம்மொழியும் எமக்கான அடையாளமாகும். உலகத்தில் இன்று வாழுகின்ற எல்லா மொழிகளிற்கும் தாய் மொழியான 6 மொழிகளில் மெ்மொழியான தமிழ் மொழியும் உள்ளது. அந்த மொழியை அடிப்படையாகக்கொண்ட இனம் நாங்கள்.

ஆகவே எங்களிற்கான மொழி அடையாளம் நிலையானதும், நீடித்து நிலைக்ககூடியதும், அழிக்கப்படமுடியாததுமான மொழி அடையாளத்தைக்கொண்டவர்கள் நாங்கள். எங்களிற்கான உடை, பண்பாடு, காலாச்சாரம், தொடங்குகின்ற முறை, பண்டிகைகளை கொண்டாடுகின்ற முறை எல்லாவற்றிலும் எமக்கு ஒரு ஒழுங்கு முறை உண்டு.

அந்த ஒழுங்குமுறைகளு்மு, நெறிப்படுத்தலும் எங்களுக்கென்றொரு அடையாளமாக கொள்ளப்படுகின்றது. அதனால்தான் மொழி, பண்பாடு கொண்ட தமிழ்த் தேசிய இனம் இந்த மண்ணிலே ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கின்றது.

அதே அடையாளம் கரைச்சி பிரதேச சபை இழந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நீங்கள் இன்று உங்களுக்கென்று ஒரு கொடியை நிலையானதாக வரைந்திருக்கின்றீர்கள். கொடியோடு சேர்ந்து உங்களிற்கான இலச்சினை திருத்தப்பட்டிருக்கின்றது. ஒரு நிலையான இலச்சினை வரையப்பட்டிருக்கின்றது. குறித்த பணி மிகப்பெரிய உள்ளதமான பணி என அவர் இதன்போது தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen