உலகம்

இந்தியாவிலும் பங்களாதேஷிலும் தாக்குதல் நடத்தப்படும்: ஐ.எஸ் எச்சரிக்கை!

தெற்காசிய நாடுகளான இந்தியா மற்றும் பங்களாதேஷில் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேரடி எச்சரிக்கை மூலம் அந்த அமைப்பு இதனை அறிவித்துள்ளது.

பங்களாதேஷின் டாக்கா நகரிலுள்ள திரையரங்கிற்கு அருகில் சிறிய வெடிப்புச் சம்பவம் பதிவானதன் பின்னர், தமது தாக்குதல் தொடர்பில் ஐ.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

வங்காளம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், பழிவாங்கும் எண்ணமுடைய தமது நோக்கத்தை ஒருபோதும் அழிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய தெளஹீத் ஜமாத் எனப்படும் உள்நாட்டு பயங்கரவாத அமைப்பு கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியதன் பின்னர், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் இந்த எச்சரிக்கை அபாயகரமானது என டாக்கா நகரின் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் தலைமையதிகாரி தெரிவித்துள்ளார்.

செய்தி மூலம் – News1st

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com