உலகம்செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பலி : ஒரேநாளில் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு.!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 4 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் 402,110 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், இந்தியாவில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 19,157,094 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 31 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 3,522 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button