அரசியல்

இந்தியாவில் அமைதி போராட்டத்தில் முன்னெடுத்துள்ள இலங்கை மாணவர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலமையையடுத்து புதுடில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர்கள் சிலர் அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமனம் செய்யப்பட்டமை ஜனநாயக விரோத செயல் என்று தெரிவித்து பேராட்டம் நடத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் இதன்போது தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம்  தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று புதுடில்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் பிரதித் தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கையொப்பமிட்டு இந்தக் கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button