சமூகம்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை:யாழில் பரபரப்பு
இந்தியப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்குப் புடவை வியாபாரத்தின் நிமித்தம் தனது கணவருடன் வருகை தந்திருந்த இந்தியப் பெண்ணே இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த ஒரு மாதகாலமாக கொட்டடி நமசிவாயம் பாடசாலைக்கு அருகாமையில் தனது கணவருடன் தங்கியிருந்த குறித்த பெண் தனக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இவ்வாறான நிலமையில் நேற்று இரவு நித்திரைக்குப் போவதாக கூறிவிட்டு சென்றவர் காலை எழுந்து பார்த்த போது, தூக்கிட்ட நிலையில் இருந்ததாக குறித்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.