உலகம்செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 802 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இந்தியாவில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 59 இலட்சத்து 30 ஆயிரத்து 965 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான 2102 கொரோனா மரணங்களுடன், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 184,672 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, வைத்தியசாலைகளில் ஒட்சிசனை வழங்கும் செயற்பாடுகளும் தடைப்பட்டுள்ளமையினால் மக்களைப் போன்று சுகாதார பிரிவினரும் கடும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை தடுப்பதற்கு பல புதிய சட்டவிதிகளை அறிமுகப்படுத்த மகாராஷ்டிரா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com